‘வெளிநாட்டில் பரமன்’… நடுரோட்டில் Basket Ball விளையாடும் நடிகர் சசிகுமார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சசிகுமார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையும் கொண்டவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அயோத்தி.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத இடத்தை அயோத்தி திரைப்படம் பிடித்துவிட்டது.

   

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களை உருவாகி வருகிறது. சமீபத்தில் நந்தன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.என்னதான் சசிகுமார் நடிகராக பயணித்து வந்தாலும், அவருடைய இயக்கத்தில் ஈசன் படத்திற்கு பின் எந்த ஒரு படமும் வரவில்லை.

ஆனால், கண்டிப்பாக தன்னுடைய இயக்கத்தில் அடுத்த ஆண்டு படம் வரும் என பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சசிகுமார்.

தற்பொழுது இவர் அமெரிக்காவில் நடுரோட்டில் பாஸ்கெட் பால் விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வெளிநாட்டில் பரமன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by M.sasikumar (@sasikumardir)