நடிகை சதா
தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா. இவர் இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், சதாவின் மார்க்கெட் சூடு பிடித்தது. பின்னர் எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த சதா, பின் 5 வருடங்கள் சினிமாவில் நடிக்கவே இல்லை. தற்போது அஹிம்சா என்ற தெலுங்கு படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். எனவே ஒரு பேட்டியில் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நடிகை சதா கூறியதாவது, வாழ்க்கையின் நோக்கம் என்பது சந்தோஷமாக இருப்பது தான் என்றும் திருமணம் செய்து கொண்டால் தான் சந்தோஷம் கிடைக்கும் என்றும் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார்.
மேலும் கூறிய அவர், நீங்கள் தனியாக இருக்கும்போது நீங்கள் சந்தோஷமாக வாழலாம், உங்களுக்காக இந்த வாழ்க்கை இருக்கிறது எனவும் ஆனால், திருமணம் செய்து கொள்ளும்போது மனைவி கணவனுக்காகவும், கணவன் மனைவிக்காகவும் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள் வாழ வேண்டியிருக்கிறது எனவும் கூறினார். என்னால் அப்படி இருக்க முடியாது என்பதால் தான், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார். அப்படி ஒருவேளையில், நான் திருமணம் செய்து கொண்டால், என்னை திருமணம் செய்யவுள்ள நபர், சுத்த சைவமாக இருக்க வேண்டும். இவ்வாறு நடிகை சதா கூறியுள்ளார்.