ஃபுட்பால் மைதானத்தில்…. “பேரன் தீரனின் 11 வது பிறந்த நாளை கொண்டாடிய சத்யராஜ்”…. வைரல் புகைப்படங்கள்..!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். 80 மற்றும் 90 காலகட்டத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

   

ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார்.

தமிழில் தற்போது வரை நடித்து வரும் சத்யராஜ் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் நடிகர் அல்லது நடிகைகளுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இவரது மகன் சிபிராஜும் ‘லி’ என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் தந்தை அளவுக்கு பெரும் புகழையும் இவரால் பெற முடியவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கு போராடி வருகிறார்.

நடிகர் சிபிராஜின் மகனுக்கு தீரன் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் தீரன் சின்னமலை பிறந்த தினத்தில் பிறந்த காரணத்தினால் அவருக்கு அந்த பெயரை சூட்டி இருக்கிறார்கள்.

நேற்று தீரன் தன்னுடைய 11 வது நாள் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இதனை முன்னிட்டு ஃபுட்பால் மைதானத்தில் விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் சத்யராஜ் சிபிராஜ் மற்றும் அவரின் பேரன் தீரனுடன் புட்பால் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..