நடிகையர் திலகம் சாவித்திரியின் மகளா இது..? பிக்பாஸில் இவரும் பங்கேற்றாரா..!!

நடிகை சாவித்திரி

இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான புகழ்பெற்ற, பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் சாவித்திரி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

   

இவர் தமிழ் சினிமாவில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்த இவர், தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து, நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்டார். அந்தக் காலத்தில் ஜெமினி கணேஷன் மற்றும் சாவித்திரி இணைந்து படங்கள் நடித்த நிலையில், நிஜத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சதீஷ் என்ற மகனும் சாமுண்டீஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

மேலும் இவரது மகள் சாமுண்டீஸ்வரி, சினிமாவில் ஆர்வம் காட்டாமல் வேறு பல துறைகளில் நடித்து வந்த நிலையில், இவரது போட்டோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. இவரது மகன் அபிநய் வட்டி, பிக்பாஸ் சீசன் 5இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

அச்சு அசலாக சாவித்ரி போலவே இருக்கும் மகள்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...! | Actress savitri Daughter Vijaya Chamundeswari Latest photos going viral