
நடிகர் சென்ட்ராயன்
தமிழ் சினிமாவில் கடந்த 2007 இல் வெளியான, இயக்குனர் வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன்.
அதன்பிறகு, அவர் பல படங்களில் நடித்த நிலையில், மூடர் கூடம் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து, ரௌத்திரம் படத்தில் வில்லன் ரோலிலும், பல படங்களில் நகைச்சுவை ரோலிலும் நடித்தார்.
சென்ட்ராயன் “விசயம் வெளிய தெரியகூடாது” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் கடந்த 2014 அன்று தனது நெருங்கிய தோழியான கயல்விழியை திருமணம் செய்தார்.
மேலும் இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்ற நிலையில், இவரின் மகன்கள் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.