பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதோ வைரலாகும் கியூட் குடும்ப புகைப்படம்..!!

நடிகர் சின்னி ஜெயந்த்

தமிழ் நகைச்சுவை நடிகர் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆன நடிகர் சின்னி ஜெயந்த், 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 300-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்த இவர் 1980 மற்றும் 1990 காலகட்டங்களில் பல படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்து, பல ரசிகர்களை கவர்ந்தார். காமெடியில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள இவர், நடிப்பை தாண்டி மிமிக்ரி செய்வதன் மூலம் அதிகம் பிரபலமானார். இவர் தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

   
அழகிய குடும்ப புகைப்படம்

இந்நிலையில் சின்னி ஜெயந்த் தனது இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்  சமூக வலைதளத்தில் ரசிகர்களால் வைராலகி வருகிறது. மேலும் திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் பொதுவாக திரைத்துறை செல்வதே வழக்கமாக உள்ள நிலையில் இவரது மூத்த மகன் குடிமையியல் தேர்வில் வெற்றி பெற்று, சப் – கலெக்டராக உள்ளார்.

பிரபல நடிகர் சின்னி ஜெயந்த்க்கு இவ்ளோ பெரிய மகன்களா..இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Chinni Jayanth Family Photo