என் அருகில் மிகவும் நெருக்கமாக வந்து… மறக்க முடியாத சம்பவம்… கசப்பான அனுபவம் பற்றி ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!!

ஸ்ருதி ஹாசன்

தென்னிந்திய சினிமாவின் பிரபல ஒருவராக வலம் வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

shruti hassan pic

மேலும் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் என்ற நடிப்பில் உருவாகும் ‘சலார்’ என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

   

கசப்பான அனுபவம்

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதி ஹாசன், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் மும்பை ஏர்போட்டில் சென்ற போது ஒரு நபர் என்னை பின் தொடர்ந்து வந்தார். ஆனால் அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது.

பின்னர் அவர் எனக்கு நெருக்கமாக வந்ததால், அசவுகரியமாக உணர்ந்தேன். உடனே அந்த இடத்தில் இருந்து வேகமாக சென்று, காரில் ஏறினேன். அந்த நபரோ அதுவரையில் என்னை பின் தொடர்ந்து வந்தார் என்றும் அப்போது நான், நீங்கள் யார் என சத்தமாக கேட்டேன் என்றும் கூறினார்.

உடனே அந்த நபர் அந்த  இடத்தில் இருந்து நழுவி சென்று விட்டார் என்றார். நான் எனக்கென்று பாடிகார்டு வைத்துக்கொள்ள விரும்பவில்லை மற்றும் சுதந்திரமாக வாழ தான் ஆசைப்படுவதாக ஸ்ருதி ஹாசன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.