அட….. 41 வயது நடிகை சோனியா அகர்வால்-ஆ இது? டீனேஜ் பெண் போல மாறிட்டாரே…. இதோ லேட்டஸ்ட் போட்டோ…!!

நடிகை சோனியா அகர்வால்

தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர்  செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. இவர் சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகளில் ITFA சிறந்த புதிய நடிகைக்கான விருதைப் பெற்றார். மேலும் இவர் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

   

விவாகரத்துக்கு பின் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சோனியா அகர்வால் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அத்துடன் அடிக்கடி பேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.மேலும் இவர் தற்போது தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் குணச்சித்திர கதா பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது சோனியா அகர்வாலுக்கு 41 வயதாகிறது. இந்நிலையில் தற்போது அவரது எடையை குறைத்து செம ஃபிட் ஆக மாறி இருக்கிறார். எனவே அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரை டீனேஜ் நடிகை போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.