பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சோனு சூத். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.
நடிகர் சோனு சூட், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து அஜித்துடன் ‘ராஜா’, விஜய்யுடன் ‘நெஞ்சினிலே’, பிரசாந்த்துடன் ‘மஜ்னு’, ரஜினியுடன் ‘சந்திரமுகி’ உட்பட தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் ,ஆங்கிலம் ,சீனம், மராத்தி ,கன்னடம் ,தெலுங்கு, இந்த போன்ற பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலும் பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பில், கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகிய ‘அருந்ததி’ திரை படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்பொழுதும் டிவியில் அருந்ததி படம் போட்டால் பொம்மாயி என வில்லன் நடிகர் சோனு சூட் சொல்லும் போதே பலருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் அருந்ததி.
இவர் 2009 இல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருதை பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து பிலிம்பர் விருதையும் பெற்றுள்ளார்.
2010ல் அப்சரா ஐஐ எப் ஏ விருது பெற்றுள்ளார். இவர் ஒஸ்தி படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். .
சிறந்த நடிகராக வலம் வந்த சோனு சூத் கொரோனா காலத்தில் கொடை வள்ளலாக திகழ்ந்தார் .
நடிகர் சோனு சூத் ஹாலிவுட் நடிகையான சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைகயும் ,ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .