நம்ம சூரிக்கு இவ்ளோ நல்ல மனசா…? 10 லட்சம் ரூபாயை தூக்கி கொடுத்துட்டாரு… வைரலாகும் புகைப்படம்…!

நகைச்சுவை நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50 பரோட்ட்டாக்களை  சாப்பிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலிருந்து பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில்  நடித்து ரசிகர்களையே வரவேற்பை பெற்றார்.

   

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்த இவர், விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்துவிட்டார். அதில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பலத்த மழை பெய்து புயல் மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டது.

அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நடிகர் சூரி, 10 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கியுள்ளார். சூரி, உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பணத்தை கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.