‘ஜெயம்’ பட காமெடி நடிகர் சுமன் ஷெட்டி இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?… ஆள் அடையாளமே தெரியலையே…

நடிகர் ஜெயம்ரவி அறிமுகமான ‘ஜெயம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சுமன் ஷெட்டி. ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிறவியிலேயே மிக பெரிய பணக்காரர். மிக பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் தான் நடித்த படங்களில் மிகவும் எளிமையாக, எதார்த்தமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.

   

இப்படத்தில் சதா கோபிநாத், ராஜு, பிரகதி, நிழல்கள் ரவி, செந்தில், மயில்சாமி, இளவரசு, நளினி இன்று பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றதோடு சூப்பர் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அலிபாபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதுவே அவருடைய முதல் படமாகும்.

இதை தொடர்ந்து அவர் குத்து, 7ஜி ரெயின்போ காலனி, கேடி, மன்னன் வந்தான்,  மண்ணின் மைந்தன், சண்டக்கோழி, பிப்ரவரி 14, வரலாறு, தோரணை, படிக்காதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் நாக பவானி என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.  நடிகர் சுமன் செட்டி கடந்த ஜூன் 9 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கூறி வருகின்றனர்.