நான் இப்படி தான் நடிப்பேன்… படத்தில் லிப் லாக், படுக்கையறை சீன்..! நடிகை சுனைனா ஓபன் டாக்…!!

நடிகை சுனைனா

தமிழ் சினிமாவில் ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா, தொடர்ந்து மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இளம் நடிகர்களுடன் நடித்து வரும் சுனைனா, சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை.

   

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் இவர், இறுதியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பல கலவையான விமர்சனங்களும் வந்தன. இதனையடுத்து தெறி படத்தில் விஜய்யுடன் சிறிய ரோலிலும் நடித்திருப்பார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சுனைனாவிடம், லிப் லாக் முத்த  சீனில் நடித்திருந்ததை பற்றி கேள்வி கேட்ட போது, அதற்கு சுனைனா கூறியுள்ளதாவது, இந்த மாதிரி காட்சியில் நடிப்பதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

மேலும் பேசிய அவர், படத்தின் சூட்டிங் சென்றால் அங்கு நடிப்பேன் என்றும் அது முடிந்த பின், அங்கு இருந்து வந்துவிடுவேன் என்றும் கூறினார். ஆனால் படத்தை பார்ப்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அது எனக்கு வெறும் நடிப்பு மட்டும் தான். இவ்வாறு நடிகை சுனைனா பேசியுள்ளார்.