பிரபல மலையாள நடிகையுடன் இணைந்து… மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுத்த நடிகர் சூரி… யார் தெரியுமா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகர் சூரி பிரபல மலையாள நடிகை அன்னா பென் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு நல்ல காமெடி நடிகர் சூரி. இவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக துணை நடிகராக இருந்து வாய்ப்புகளுக்காக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் சூரி தற்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

   

இவர் தேசிய விருது இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவை தான். இவரது காமெடி காட்சிகளுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இன்றளவும் மீம்ஸ்களில் இவரது காமெடி காட்சிகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தற்பொழுது நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில் இவர் புதிதாக ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். தற்போது அப்படத்தின் பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகர் மலையாள நடிகை அன்னா பென் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் பூஜை புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக்கபட்டும்  வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….