
சுஷாந்த் சிங்
நடிகர் சுஷாந்த் சிங் எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் பாலிவுட் டில் (இந்தி) சினிமாவில் நுழைந்தவர். பல தடைகளைக் கடந்து, அவருடைய கடின உழைப்பால் இந்தி திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம்வந்தார். குறிப்பாக இவர் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். 34 வயதான சுஷாந்த் சிங் மரணம் ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பிறகு சுஷாந்தின் மரணம் கொலையா என பல சிக்கல்கள் கொண்ட வழக்காக மாறியது.
சுஷாந்த் போலவே இருக்கும் நபர்
சுஷாந்த் சிங் இறப்பு குறித்து, தற்போதும் ரசிகர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கும் நிலையில், தற்போது அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பல பேர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். இருப்பினும் இது AI மூலமாக போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் அந்த நபரை பற்றி கூறுகின்றனர். வீடியோவை நீங்களே பாருங்க..
https://www.instagram.com/reel/Cvo83xGoety/?utm_source=ig_web_copy_lin