நடிகை சுவாதி ரெட்டி
தமிழ் சினிமாவில் கடந்த 2008 -ம் ஆண்டு ஜெய், சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி, தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த சுவாதி, கடந்த 2018 -ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து இவர் சசிக்குமாருடன் இணைந்து போராளி படத்திலும், விஜய்சேதுபதியுடன் இணைந்து இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை போன்ற சில படங்களிலும் நடித்து பிரபலமானார்.
மேலும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கணவர் போட்டோவை நீக்கியதால், கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
நடிகருக்கு முத்தம்
சுவாதி திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்து, தற்போது ‘மந்த் ஆஃப் மது’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கியுள்ள நிலையில், நவீன் சந்திரா,ஸ்ரேயா நவிலே ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது சுவாதி மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது மேடையில் சாய் தரண் தேஜ் பேசியதாவது, “கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி என் சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் ஸ்வாதி” என்றார்.
உடனே சுவாதி அவருக்கு திடீரென மேடையில் வைத்து முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோ இதோ,
Supreme Hero #SaiDharamTej cherishes his friendship with #SwathiReddy from their college days at #MonthOfMadhu trailer launch event!!????♥️@IamSaiDharamTej #ColorsSwathi #TFNReels #TeluguFilmNagar pic.twitter.com/kcfDI5WpSq
— Telugu FilmNagar (@telugufilmnagar) September 26, 2023