என் கணவரை விவாகரத்து செய்த காரணம் இது தான்… மேடையில் நடிகை ஸ்வாதி ஓபன் டாக்..!

நடிகை சுவாதி ரெட்டி

தமிழ் சினிமாவில் கடந்த 2008 -ம் ஆண்டு ஜெய், சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி, தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த சுவாதி, கடந்த 2018 -ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இதனையடுத்து இவர் சசிக்குமாருடன் இணைந்து போராளி படத்திலும்,  விஜய்சேதுபதியுடன் இணைந்து இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை போன்ற சில படங்களிலும் நடித்து பிரபலமானார்.

பின்னர் இவருக்கு ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால், பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது. அதன் பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியானார். இதனையடுத்து திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு வாரத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி பேட்டி கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கணவர் போட்டோவை நீக்கியதால், கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்வாதியிடம், உங்களுடைய கணவரை பிரிந்து விட்டீர்களா? என்ன காரணம்..?  என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது, நான் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறேன் என்றும் அதன்படி, என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவான ஒரு நிகழ்ச்சியில் பேசுவது தவறு என நினைக்கிறேன் என்றும் கூறினார். இந்நிலையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு நடிகை ஸ்வாதி பேசியிருக்கிறார்.