
நடிகை திரிஷா
தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையான திரிஷா சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் நடித்து முடித்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தமன்னா அந்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
39 வயது நடிகருக்கு அம்மா?
இந்நிலையில் திரிஷா தெலுங்கில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்றும் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி என்ற படத்தின் ரீமேக்கில், சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் திரிஷாவின் மகன் ரோலில் நடிகர் சர்வானந்த் நடிக்க இருக்கிறார். இதனால் 40 வயது திரிஷா, 39 வயதாகும் சர்வானந்துக்கு அம்மாவாக நடிப்பது தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
நடிகர் சர்வானந்த்
தெலுங்குத் திரைப்பட நடிகரான சர்வானந்த், தமிழ் திரைப்பட உலகில் ராம் எனவும் அறியப்படுகிறார். தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ என்ற படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.