மறைந்த நடிகர் மற்றும் டாக்டர் சேதுராமனின் குடும்ப புகைப்படங்கள் இதோ….

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் தான் வி .சேதுராமன். இவர் செப்டம்பர் 13ஆம் தேதி 1985 இல் பிறந்துள்ளார்.

   

இவர் நடிகர் மட்டுமல்ல சிறந்த மருத்துவர் கூட. இவரை திரையுலகில் சேது என்ற பெயரால் அழைப்பார்கள் .

இவர் 2012 ஆம் ஆண்டு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவர் தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா,50\ 50 போன்ற  படங்களில் நடித்துள்ளார்.

மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்.

சேதுராமன் எம். பி. பி .எஸ், எம்.டி படித்து தோல் மருத்துவராகவும் பணியாற்றினார் .லேசர் மூலம் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியாளராகவும் இருந்தார்.

இவர் உமையாள் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் சென்னையில் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில்  அவரை அனுமதித்தனார். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிர் இழந்தார்.

தற்போது இவரின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.