
நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும், பின்னணிப் பாடகரும் ஆவார்.
சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே வடிவேலு கடந்த 2016ம் ஆண்டு விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா கலைவாணி என்ற இரு மகள்களும் மற்றும் சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
மேலும் இவரது மகள் கார்த்திகாவுக்கு அண்மையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், கடைசியாக சந்திரமுகி இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரின் முழு சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் இத்தனை ஆண்டுகால திரைபயணத்தின் மூலம் நடிகர் வடிவேலு சேர்த்த முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி என்று கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமாக விளக்கப்படவில்லை. ஆனால் திரை வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.