
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் தான் விதார்த்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்.முதலில் இவர் சமையல் காரராக இருந்து தனது என் வாழ்க்கையை தொடங்கினார்.
இவர் தேவகோட்டை, மதுரை, கோயம்புத்தூர் என பல இடங்களில் பஸ் நடத்துனராக பணியற்றினார். சீனிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இந்த எண்ணமே இவரை தமிழ் திரையுலகில் 2001ஆம் ஆண்டு முதல் சிறிய வேடங்களில் நடிக்க வைத்தது.
இதன்பின் இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து ‘மைனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மைனா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் பிரபமாகிவிட்டார் நடிகர் விதார்த்.
இவர் மைனாவை தொடர்ந்து குற்றமே தண்டனை ,ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, காற்றின் மொழி, சித்திரம் பேசுதடி 2 என பல படங்களை தொடர்ந்து நடித்து வந்தார்.
இவர் முதலில் தல அஜித்துடன் ‘திருப்பதி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதன் பின் அஜித்துடன்’ வீரம் ‘படத்தில் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார்.
இவர் அதிகமான படங்கள் நடித்து வந்தாலும் மைனா படம் தந்த வெற்றி அதன் பின் எந்த படமும் அந்த அளவிற்கு வெற்றி தரவில்லை.
பழனியைச் சார்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பவரின் மகள் காயத்ரி என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.