தமிழ் திரையுலகில் தளபதி விஜய் கோடான கோடி ரசிகர்களின் பேராதரவோடு உச்ச நட்சத்திரமாக வலம் வந்த அவர் விஜய் மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அரசியலில் களமிறங்கிய அவர் தான் கமிட் ஆன திரைப்படங்களில் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால், அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். எனினும், அவரை திரைப்படங்களில் பார்க்க முடியாது என்று வருத்தமும் அடைந்தனர். இதனிடையே தளபதி விஜய்யின் 69 வது திரைப்படத்திற்கான இயக்குனர் யார்? என்பதில் பல குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருந்தது.
மேலும், அத்திரைப்படத்தை விரைவில் தொடங்கி இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட திட்டமிட்டு இருக்கிறார்கள். அத்திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்களும் ஒவ்வொரு நாளாக தொடர்ந்து வெளிவரும். அதன் பிறகு விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்படுவதாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.