
விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் என்பது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்த சண்டை நீடிக்குமோ என்பது தெரியவில்லை. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அனைவருமே விஜய் – அஜித் இருவருமே போட்டியாளர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படம் வெற்றியானதற்கு நடிகர் விஜய் ஒரு பார்ட்டி வைத்துள்ளார்.
அப்போது அதில் கலந்துக்கொண்ட ப்ரேம் ஜியிடம், விஜய் “நீ உங்க அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படத்துலையும் நடிக்கிறாய் . மேலும் நீ அஜித் பேன் தானே, அதனால் உங்க அண்ணே, என்னை வைத்து படம் இயக்கினால், நீ அந்த படத்தில் இருக்க மாட்டாய். இவ்வாறு விஜய் ஜாலியாக கூறியுள்ளார்.
ஆனால், அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பலர், தற்போது இதை ஷேர் செய்து, பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு வெங்கட் பிரபு “அட இது ஜாலிக்கு சொன்னதுப்பா” என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.