பெரும் சோகம்… நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை… பேரதிர்ச்சியில் மூண்ட குடும்பம்… போலீஸ் தீவிர விசாரணை..!!

   

 

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் லாரா சென்னை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் சைத்தான், காளி, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தும், தயாரித்தும் உள்ளார். இவரது மகள் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே நேற்று இரவு தூங்க சென்ற பின், அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலையில் அவரது அறையில் சென்று பார்த்த விஜய் ஆண்டனி, அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இது குறித்து மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . அவரது மகள் உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரையுலகில் உள்ளோர்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.