‘அவளுடன் நானும் இருந்து விட்டேன்’ என்று உருக்கமாக பதிவிட்ட நடிகர் விஜய் ஆண்டனி…

இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் விஜய் ஆண்டனி .அதன் பிறகு நடிகராகவும் திரையுலகில் வ லம் வந்தார். இவரின் மூத்த மகள் செப்டம்பர்  19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் மூத்த மகள் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் அவர் அன்றைய தினம் அவருடைய தந்தை அருகில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   

பின்னர் ஓமத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள்  அஞ்சலிக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக மன அழுத்தமாக இருந்து வந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

மகளின் பிரிவை தாங்க முடியாமல் வாடிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகள் இறந்த நிலையில் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.