
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளரும் கூட. ஆரம்ப கட்டத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இவரது மகள் லாரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் லாரா .
முந்தனனாள் மாலை முதலே கடுமையான சோகத்துடன் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருந்திருக்கிறார்.இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் லாராவின் அறைக்கு சென்று பார்த்த விஜய் ஆண்டனி மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து பதறி இருக்கிறார்.இதனை தொடர்ந்து மகளை மீட்டு அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லாரா ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய அனுதாபங்களையும் ஆறுதல்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய இந்த விபரீதம் முடிவுக்கு என்ன காரணம்..? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.அவருடைய அறையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அறையில் உள்ள பொருட்கள் பொருட்களை தடையவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் கடைசியாக பேசியது யார் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்ட வருகின்றது.இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் லாரா கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

