விஜய் அப்பாவுக்கு சர்ஜரி செய்யும் அளவுக்கு என்ன பிரச்சனை தெரியுமா…? SAC வெளியிட்ட வீடியோ இதோ…!!

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்

1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சமூக பிண்ணனியுள்ள பல படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.  நடிகர் விஜயின் அப்பாவான இவர், தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். தற்போது சீரியலில் நடித்து வரும் எஸ் ஏ சந்திரசேகர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

கோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜய்யின் தந்தை SA சந்திரசேகர் பிறந்தநாள்- வெளிவந்த வீடியோ | Vijay Father Sa Chandrasekar Birthday Celebration

   

அப்படி அண்மையில் ஒரு வீடியோவில் தன் உடல்நிலை பற்றி விளக்கமாக பேசியுள்ளார். அதில், நான் எப்போது என்ர்ஜியான பர்சன் என்பது உங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் இரண்டு மூன்று மாதமாக தனக்கு ஒருமாதிரியாக எனர்ஜி குறைந்ததுபோல் ஒரு ஃபீல் இருந்தது என்றும் கூறியுள்ளார். பின் மருத்துவரை அணுகினேன். அவர் பார்த்தவுடன் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதால், அதை எடுத்துப் பார்த்தேன். அப்போது ஸ்கேனை பார்த்த மருத்துவர் ஒரு பிரச்சனை இருக்கு எனவும் உடனே சர்ஜரி செய்யனும் என்று கூறினார். உடனே நானும் சர்ஜரி முடித்து, நேற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன் என்று பேசினார்.

Gallery

எனவே அனைவருக்கும் நல்லது கெட்டது என்று மாறி, மாறி நடக்கும். ஆனால்  பிரச்சனை வந்துவிட்டதே என அதை நினைக்காமல், அதை ஏற்றுக்கொண்டால் மனம் பாசிட்டிவ் ஆக இருக்கும். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதை   கேட்ட ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். வீடியோ இதோ,