சினிமாவை பொருத்தவரை நடிகர்களுக்கு தங்களுக்கு ஒரு திரைக்கதை பிடிக்கவில்லை என்றால் அந்தப் படத்தை தவிர்த்து விட்டு வேறுப்படத்திற்கு விடுவார்கள் இதுதான் உலக நடைமுறை. ஒருவேளை அந்தக் கதையை சொல்லக்கூடிய நபர் அந்த நடிகருடைய அப்பாவாக இருந்தால்..? அந்த அப்பா தன்னுடைய மகனுக்கு சொல்லாமல் தெலுங்கில் ஹிட்டான ஒரு படத்தின் கதையை ரீமேக் ரைட்ஸ் வாங்கிக் கொண்டு வந்து அதன் பிறகு தன் மகனிடம் அந்த கதையை சொன்னால்..? எப்படி இருக்கும்..?
இதைத் தான் நடிகர் விஜய் அப்பாவும் செய்துள்ளார்.1996 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த திரை படத்தை பார்த்த நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் விஜய்யிடம் சொல்லாமலேயே வாங்கி வந்திருக்கிறார்.அதன் பிறகு இந்த படத்தின் கதையை கூறி படத்தை விஜய்க்கும் போட்டு காட்டி இருக்கிறார். படத்தை முழுதாக பார்த்த விஜய் இது ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருக்கிறது மட்டுமில்லாமல் ஹீரோவை வில்லன் போல் காட்டுவதாக இருக்கிறது.
இந்த படம் ஓடாது.இதில் நான் நடிக்க மாட்டேன் என மறுத்திருக்கிறார். ஆனால், எஸ்.ஏ.சி இந்த படத்தில் நீ கண்டிப்பாக நடிக்க இந்த படம் வெற்றி பெறும் என்று எஸ்.ஏ.சி கூறி இருக்கிறார்.அப்போது, தந்தை பேச்சை மீற முடியாத காரணத்தினால் அந்த படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய்.படம் வெளியான சில நாட்கள் அந்த படம் விஜய் சொன்னது போலவே சரியாக ஓடவில்லை பட விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து பயங்கரமான அழுத்தம்.
ஆனால், விஜய் வில்லன் மாதிரி நடிச்சிருக்காரு என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரவ தொடங்கியதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது.அதனை தொடர்ந்து படத்திற்கு எஸ்.ஏ.சி ப்ரமோஷன் செய்யும் விதமாக, இந்த படத்தை பார்த்தால் பிரிந்து சென்ற தம்பதிகள் கூட மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று கூறி ஏற்கனவே பிரிந்து சென்ற தம்பதிகள் ஒரு 10 பேரை அழைத்து வந்து அவர்களுக்கு விஜயின் முன்பு மாலை மாற்றி சேர்த்து வைத்து அதை விளம்பரப்படுத்தினார்.
இந்த விளம்பரம் அந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்தது. குடும்பம் குடும்பமாக திரையரங்கை நோக்கி மக்கள் வெள்ளம். படத்தின் வசூல் நாளுக்கு நாள் கூடியது. அந்த படம் வெற்றி படமாக மாறியது. அந்த திரைப்படம் தான் நடிகர் விஜய் , சிம்ரன் நடிப்பில் இயக்குனர் செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான பிரியமானவளே.