நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவின் பத்தாம் ஆண்டு நினைவு நாள்…. மலர் தூவி மரியாதை செலுத்திய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மஞ்சுளா. இவர் 1969 ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’  என்ற திரைப்படத்தில் நடித்து   திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து  இதய வீணை அம்மன் அருள் பூக்காரி உலகம் சுற்றும் வாலிபன் ராஜ நாகம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் .

நடிகை மஞ்சுளா பிரபல நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகுமார் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை மஞ்சுளா வெள்ளித்திரை மட்டுமல்லாமல் நந்தினி, உன்னைப் பார்க்கும் நேரம். சுந்தரகாண்டம் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர்  கன்னடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவ்வாறு பிரபல நடிகையாக இருந்தபோது ‘உன்னிடம் மயங்குகிறேன்’என்ற திரைப்படத்தில் நடித்த போது விஜயகுமார் இடையே காதல் ஏற்பட்டது.

அதன் பிறகு  1976 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  நடிகர் விஜயகுமார் ஏற்கனவே திருமணம் ஆகிய மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகளுக்கு வனிதா விஜயகுமார்,  ப்ரீத்தா விஜயகுமார்,  ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு நடிப்பது நிறுத்திவிட்டு தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றனர்.

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘உள்ளம் உன்னை தேடுதே’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இது தான் இவரின் கடைசி திரைப்படம்.

பிறகு உடல்நல பாதிக்கப்பட்ட மஞ்சுளா படுக்கையிலிருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் ரத்தம் குறைந்த காரணத்தினால் உயிரிழந்தார்.

தற்போது இவரின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் நேற்று நடைபெற்றது இதில் அவரது குடும்பத்தினர் அனைவரும் மஞ்சுளா அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில்  பிரபல சினிமா பிரபலங்களான ராதிகா,  சினேகா அவர்களின் அக்கா உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மலர் தூவி  மரியாதை செய்தனர்.  தற்போது இந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.