இயக்குனராக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்… தீயாய் பரவும் புகைப்படங்கள் இதோ….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்க்கு ஜேசன்  சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

தந்தையுடன் இணைந்து வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் சஞ்சய். இதை தொடர்ந்து நடிகராக இல்லாமல் இயக்குனராக மாறி உள்ளார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். தற்பொழுது மீண்டும் ஒரு புதிய குறும்படத்தை இயக்கி வருகிறார்.

தற்பொழுது இந்த குறும்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து விரைவில் ஒரு இயக்குனராக சஞ்சய் தமிழ் சினிமாவில் நுழைவார் என்று இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ …