இந்த சிறுவயது புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் வாரிசு நடிகர் யார் தெரியுமா?…நீங்களே பாருங்க…

சமீபகாலமாகவே இணையத்தில் திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படங்களை பதிவு செய்து இவர்கள்  என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வாரிசு நடிகரான நடிகர் விக்ரம் பிரபுவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

   

மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி, அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம் போய், தற்போது அவரது மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களிள் ஒருவராக உள்ளார்.

நடிகர் பிரபு ‘சங்கிலி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் .பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ‘சின்னத்தம்பி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.

தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், இறுதியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .

திரைத்துறையில்  தற்பொழுது நடிகர் விக்ரம் பிரபு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தற்பொழுது ரைடு மற்றும் பொன்னியின் செல்வன் 2 என இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்பொழுது வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த கியூட் புகைப்படம்….