தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், துணை பாத்திரங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் பயில்வான் ரங்கநாதன், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர். நடிகரும், பத்திரிகையாளருமான நடிகர், நடிகைகளை பற்றி, பல மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷாலிடம் ஒரு ஆடியோ க்ளிப்ஸ் காட்டபட்டதில், விஷால் லட்சுமி மேனனை காதலித்து திருமணம் வரை சென்றது. பின் கடைசியில் நின்றுவிட்டதால், லட்சுமி மேனன் குண்டாகி விட்டார் என்றும் பேசியுள்ளார்.

இதை கேட்ட நடிகர் விஷால், வருகிற போகி பண்டிகை அன்று பழைய பொருள்களுடன் சேர்த்து பயில்வானையும் கொளுத்தி போட வேண்டும் என்பது என் ஆசை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் விஷால் கூறியதாவது, நாம் யாரை பற்றியும் பேசலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை என்பது இருக்கிறது. அவருக்கும் மனைவி மற்றும் மகள் இருக்கிறார்கள் தானே எனவும் ஒரு பெண்ணை பற்றி இப்படியா பேசுவது எனவும் விஷால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.