90’ஸ் கவர்ச்சி நடிகை விசித்ராவுக்கு இவ்ளோ பெரிய மகனா?… அடுத்த ஹீரோவா? வைரல் போட்டோஸ்…!!

நடிகை விசித்திரா

நடிகை விசித்திரா தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திரைதுறைக்கு வந்த இவர், தற்போது தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் 90 ஸ் களில் காமெடி நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த இவர், இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘ஜாதிமல்லி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

முத்து படத்தில் நடித்த நடிகை விசித்ரா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!-TAMIZHAKAM-சினிமா செய்திகள்

   

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் ரதிதேவி என்ற ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ள விசித்திர தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலிலும் , தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கீதா கோவிந்தம்’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை விசித்ரா, தற்போது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.