தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தற்பொழுது ஜெயிலர், ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் யோகி பாபுவின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது அவருக்கு மொத்தம் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளார்.
இதில் இரண்டாவதாக பிறந்தவர் தான் யோகி ராஜா. இவர் தற்பொழுது ஆரணியில் வசித்து வருகிறார். நடிகர் யோகி பாபுவின் அண்ணனான யோகி ராஜா திருமணம் செய்து கொள்ளாமல் சாமியாராக வாழ்ந்து வருகிறார்.
தற்பொழுது இவரை பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் யோகிபாபுவின் அண்ணனா இது? அச்சு அசல் அவரைப்போலவே இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…