பாரம்பரிய உடையில் வளைகாப்பு கொண்டாடிய நடிகை பூர்ணா… அவரே வெளிட்ட புகைப்படங்கள்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. பார்ப்பதற்கு நடிகை அசின் போலவே இருப்பார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். மலையாள திரையுலகில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார். நடிகை பூர்ணா முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவரின் இயற்பெயர் ஷாம்னா காசிம். தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர்  சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் கொண்டார்.

சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

மேலும் கணவர் வீட்டில் நடந்த தமது வளைகாப்பு புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூர்ணா பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணூர் மாவட்டத்தின் பாரம்பரிய முறைப்படி நடந்த வளைகாப்பு புகைப்படங்களை பூர்ணா வெளியிட்டுள்ளார்.

வேட்டி கட்டி கண்ணூர் இஸ்லாமிய மரபுப்படி இந்த வளைகாப்பு பெண் வீட்டில் நடந்துள்ளது. வளைகாப்பில் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பூர்ணா பதிவு செய்துள்ளார்.

தற்பொழுது இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.