திருமணமாகி குழந்தை இல்லாமல்… பெண் குழந்தையை தத்தெடுத்த ‘விருமாண்டி’ பட நடிகையின் குழந்தையை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. இவர் கமல், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.

   

இதை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி ,தமிழில் அர்ஜுன் நடித்த ‘வானவில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

குறிப்பாக இவர் தமிழில் நடித்த சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகை அபிராமி 2014ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே திரைப்படம் மூலம் திரையுலகில் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை அபிராமி அன்னையர் தின ஸ்பெஷலாக ஒரு சூப்பரான தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது 40 வயது ஆகும் நடிகை அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். இக்குழந்தையை அவர்கள் கடந்த வருடமே தத்தெடுத்ததாகவும், அவருக்கு கல்கி என பெயர் வைத்ததாகவும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

.