பாக்கவே தல சுத்துதே… ஜாலியாக குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்… அதுவும் எங்கு தெரியுமா..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 8 வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கிளாமர் ரூட்டை மாற்றியுள்ளார்.

90களில் கொடி கட்டி பறந்த நடிகையான நடிகை சில்க் சுமிதா பயோபிக் கதையை வைத்து சமீபத்தில் சொப்பன சுந்தரி என்ற டைட்டிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்தார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதே சமயம் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான தீரா காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தினம்தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

 

இந்நிலையில் அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் வெளிநாடு சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.