காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நடிகை ஆல்யா மானசாவா இது?… செமையா டான்ஸ் ஆடுறாங்களே… வீடியோ உள்ளே…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி ‘சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கியவர் நடிகை ஆலியா மானசா. இத்தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து இத்தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஐலா, அர்ஷ்  என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   

ராஜா ராணி சீசன் 1 வெற்றியை தொடர்ந்த ராஜா ராணி 2 தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடரிலும் ஹீரோயினாக நடிகை ஆலியா மானசாவே நடித்து வந்து கொண்டிருந்தார். இரண்டாவது குழந்தை கர்ப்பமாக அந்த சீரியலை விட்டு விலகிய இவர், தற்பொழுது குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்கு மேல் ஆவதால் சின்னத்திரையில் மீண்டும் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.

இவர் தற்பொழுது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய லுக்கிற்குத்  திரும்பி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் விஜய் டிவியில் அல்ல, சன் தொலைக்காட்சியில். ஆம் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இனியா’ சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவரது கணவர் சஞ்சீவ் இதை சன் தொலைக்காட்சியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இருவரும் பிஸியாக சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென ஆலியா மானசா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் நடிகை ஆலியா மானசாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் தனது காலில் ஆபரேசன் செய்து திரும்பவும் நடிகையாக களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை ஆல்யா ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ‘கால் சரியாகிவிட்டதா? செமையா டான்ஸ் ஆடுறீங்களே’  என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)