2 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி… 50வது படத்தில் நடிகை அஞ்சலி… அதுவும் யாரும் இயக்கத்தில் தெரியுமா?… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தன.

   

பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறிவிட்டார் . அவரின் அந்த உடல் தோற்றம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது இவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அவ்வளவு ஒல்லியாக மாறி அதிர்ச்சி கொடுத்தார். தற்போது அஞ்சலி நடிக்கும் 50வது திரைப்படமான ஈகை திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனரான பாரதிராஜா, புஷ்பா பட வில்லன் நடிகர் சுனில், இளவரசு, அறிமுக நடிகர் ஹரி, நிஷாந்த் ரகு மற்றும் கிருஷ்ண சந்தர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

கிரீன் அமூசிமெண்ட் D3 ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளிதரன் முன்னிலையில் இந்த விழா தொடங்கியது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராக உள்ள நிலையில் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

ஈகை குணம் குறைந்த இந்த நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும் மனிதாபிமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த திரைப்படம்.

இதற்கு முன்னதாக நடிகை அஞ்சலி பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் உடன் மலையாள திரைப்படமான இரட்ட திரைப்படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஞ்சலி எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் நுழைந்து அஞ்சலி தற்போது 17 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் தற்போது தன்னுடைய ஐம்பதாவது படத்திற்காக கோலிவுட்டுக்கு அஞ்சலி மீண்டும் திரும்பியுள்ளார்.

தற்போது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.