தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் ஆரம்பத்தில் யோகா ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கும் போது அந்த வகுப்பிற்கு நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் நடிக்க நடிகை அனுஷ்காவுக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது .
இதைத் தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா பிரபல நடிகர் ஒருவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் லிவின் ரிலேஷன்ஷிப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தார் என்று பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை அனுஷ்கா பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் கதாநாயகன் பிரபாஸுடன் காதல் வயப்பட்ட நடிகை அனுஷ்கா அவரை சில காலம் காதலித்து வந்ததாகவும் ஆனால் இருபது வீட்டிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணமே செய்து கொள்ளாமல் ஒன்றாக ஒரே வீட்டில் சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் இருவரும் பிரிந்து விட்டார்கள் எனவும் ஆனால், தற்போது வரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.நடிகை அனுஷ்கா இடையில் ஒரு படத்தில் நடிப்பதற்காக உடனடி கூடி தற்போது உடல் எடை குறைக்கவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பதிவு செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.