மிக பெரிய தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்ட… நடிகை அசினின் குடும்ப புகைப்படம்…

தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்  நடிகை அசின்.

   

இவர் முதன் முதலில் 2001ல் வெளியான மலையாளத் திரைப்படத்தின் மூலமாக  திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து இவர் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்  திரையுலகில்  அறிமுகமானார் .

இப்படம் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பும்  கிடைத்தது .

இதை தொடர்ந்து  ‘கஜினி’ படத்தில் சிறப்பாக நடித்ததால், அவர் ‘சிறந்த நடிகைக்கான பிலிம்பேர்’  விருதை பெற்றார்.

பின்னர் தமிழில் இவர் வரலாறு, போக்கிரி ,வேல் , தசாவதாரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘கஜினி’ திரைப்படத்தின் மூலமாக இந்தி திரை உலகில் கால் பதித்தார் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தந்தை ஒரு தொழிலதிபர், இவர் தாயார் மருத்துவர். நடிகை அசின் 2016ல்  மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் அசின்  எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. திரையுலகில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். தற்போது குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு வருகிறார்.

இவருக்கு ஆரியன் என்ற ஒரு குழந்தை உள்ளது. நடிகை அசின் தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.