பல வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை பாவனா… ஹீரோ யார் தெரியுமா?… இந்த பிக் பாஸ் நடிகரா?…

நடிகை பாவனா தற்பொழுது தமிழில் நடிக்கவுள்ள புது திரைப்படத்தை பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளின் ஒருவராக கருதப்பட்டவர் நடிகை பாவனா. தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அதை தொடர்ந்து வெயில், தீபாவளி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா மலையாளத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு உள்ளாகி மனமடைந்து சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தார். இவர் 2018ல் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான ‘நவீன்’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் நடிப்பையும் தாண்டி இவரின் சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை பாவனா. இவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வேறு எந்த தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டே தான் வருகிறார். இந்நிலையில் 13 ஆண்டுகள் கழித்து தற்பொழுது மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை பாவனா. தற்பொழுது இவர் தமிழில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும், இப்படத்தில் நடிகை பாவனாவிற்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் இணைந்து நடிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

பல வருடங்களுக்குப் பின்னர் நடிகை பாவனா தற்பொழுது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி  கொடுக்கவுள்ளார்.  இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.