கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மகளிடையே பிரபலமானது. இந்த சீரியலில் நடிகை கோமதிப்பிரியா ஹீரோயினாக நடிக்கிறார்.

   

இவர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிகமான ரசிகர்களை கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி யில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

எதிர்பாராதவிதமாக முத்துவை திருமணம் செய்யும் மீனா தனது மாமியாரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுகிறார்.

பின்னர் மாமனார், மாமியார், வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வீட்டு வேலைகளை செய்து தனது கணவரை ஊக்குவிக்கிறார்.

தினமும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோமதி பிரியா மதுரையைச் சேர்ந்தவர் இவர் youtube மூலம் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டார்.

இதனால் ஓவியா உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

இந்நிலையில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று கோமதி பிரியா சாமி தரிசனம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.