நம்ம ஜாக்குலினா இது?… குட்டையான உடையில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்… ஷாக்கான ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சி  ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் ரக்ஷனுடன் இணைந்து தான் அதிக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். எனவே இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசு வந்தது. ஆனால் ரக்ஷனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டது என்பதால் அந்த வதந்திக்கு அப்படியே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

   

தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்க வாய்ப்பை வழங்கியது. அதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’  சீரியலில்  கதாநாயகியாக நடித்து  பிரபலமடைந்தார். மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் ”கோலமாவு கோகிலா”படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார்.

இயக்குனர் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகும் ‘கிவி’ படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.  தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் நடிகை ஜாக்குலின். இந்நிலையில் ஜாக்குலின் அவ்வளவாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குவது இல்லை.

இடையில் தனது உடல் எடையை குறைப்பதில் அதிக அக்கறை காட்டி வந்தார், தனது எடையையும் சுத்தமாக குறைத்துவிட்டார். சமீபத்தில் இவர் சிங்கப்பூர் சென்றுள்ளார், அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம ஜாக்குலினா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…