கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ பட நடிகையா இது?…. இப்படி குண்டாகிட்டாங்களே… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருபவர் இயக்குன கவுதம் வாசுதேவ் மேனன். இவருக்கு பிரதான தொழில் இயக்குனர் என்பதால் டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை இயக்கி வெற்றி அடைந்துள்ளார். அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’.

   

இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்த்து ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, கமலினி முகர்ஜி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படம் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு விமர்சன ரீதியாக அடித்து நொறுக்கியது மேலும் வசூலிலும் நன்றாகவே கல்லா கட்டியது.

இந்த படம் உலகநாயகன் கமலஹாசன் கேரியரில் ஒரு நல்ல படமாக இது அமைந்தது. இன்றும் இந்த திரைப்படமும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் கமலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. இவர் இந்தியில் அறிமுகமாகி பின் தெலுங்கு திரையுலகம் மூலம் பிரபலமானார்.

இவர் தமிழில் வேட்டையாடு விளையாடு, இறைவி, காதல்னா சும்மா இல்ல போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் அவர் உடல் எடை கூட ஆளே மாறிப்போய் காணப்படுகிறார்.