”என்னுடைய கேரியர் வீணானதற்கு அஜித் தான் காரணம்”… பரபரப்பைக் கிளப்பிய ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை…

சன் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று எதிர்நீச்சல் சீரியலாகும். இதில் நடிகை கன்னிகா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அதிகமான ரசிகர் பட்டாளமே இவருக்கு உருவாகி உள்ளது. இவர் மதுரையைச் சார்ந்தவர். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து தமிழில் எதிரி, டான்சர் ,வரலாறு, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்  மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழி  திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் சிறந்த நடிகை என்ற விருது பெற்றுள்ளார்.

இதில் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் அவருக்கு காதலியாகவும், அம்மாவாகவும் இரண்டு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கனிகா.இத்திரைப்படத்திற்கு பிறகு தான் அவருக்கு கதாநாயகி கதாபாத்திரத்தை விட, அம்மா கதாபாத்திரங்கள் அதிகமாக வந்ததாம். இதனால் அவர் வெள்ளித்திரையை  விட்டு சில காலம் விலகி இருந்தார்.

இதை தொடர்ந்து திருமணம் முடித்துக் கொண்ட இவர், தற்பொழுது சீரியலில் ரீ என்ட்ரி  கொடுத்து கலக்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இவர் விஜய், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் தனக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததாகவும் , இதற்கெல்லாம் காரணம் வரலாறு படம் தான்’ என்றும் கூறியிருந்தார். தற்பொழுது இவரின் பேட்டியானது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.