கையில் தாலியுடன் நடிகை காவியா அறிவுமணி… என்னது உங்களுக்கு கல்யாணமா?… வீடீயோ இதோ பாருங்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் இந்த சீரியலுக்கு முன்னரே ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

   

தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது. சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் மிரள் எனும் படத்தில் நடித்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பட வாய்ப்புக்காக வேண்டி இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர், தாலியை கையில் வைத்தவாறு வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘திருமணம் பண்ணி வாழ்க்கையில் கஸ்டப்படுவதற்கு  பதிலாக சிங்கிளாவே, சும்மா இருந்திடலாம்’ என ஒரு தாலியை கையில்  கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)