தனது மகள்களை best friend என்று TAG செய்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பூ…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகைகளில்  ஒருவர் நடிகை குஷ்பூ .இவர் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் நக்கத் கான்.திரையுலகிற்காக தன் பெயரை குஷ்பூ என்று மாற்றிக்கொண்டார். இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

   

இவர் நசீப் , லாவாரிஸ் , காலியா , தர்த் கா ரிஷ்தா , மற்றும் பெமிசல் ஆகிய இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1989 ஆம் ஆண்டு வெளியான ‘வருஷம் 16’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர்  1990களில் தமிழ் திரைப்பட உலகில்  முன்னணி கதாநாயகியாக வலம்  வந்தார். இவர் தமிழில் நடிகன், சின்ன தம்பி, பிரம்மா,பாண்டியன் ,அண்ணாமலை, மன்னன்,  ரிக்சா மாமா, கேப்டன் மகள், நாட்டாமை, சின்ன வாத்தியார்,  அலைபாயுதே,   போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர்தமிழ் சினிமாவில் ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி  போன்ற பிற மொழி படங்களிலும்  நடித்துள்ளார். இவர்  சினிமாவில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரையில் தனது காலடி தடத்தை  பதித்தார். நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி போன்ற தொலைக்காட்சி சீரியல்களில்  நடித்துள்ளார்.

நடிகை குஷ்பூ திரைப்பட  தயாரிப்பாளர்,  தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான சின்னதம்பி திரைப்படத்திற்கு பிரபுவுடன்  டப்பிங் செய்தார். அதன் பிறகு இருவரும்  காதலித்து செப்டம்பர் 12 தேதி 1993 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு  இருவரும் மன கருத்து வேறுபாட்டின் காரணமாக  நான்கு மாதங்களுக்குள் தன்னுடைய திருமண உறவை முடித்துக் கொண்டனர்.சில ஆண்டுகளுக்கு பிறகு   நடிகை குஷ்பு  நடிகர் சுந்தர்சியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர் நடிகர் மட்டும்மல்ல இயக்குனர் , தயாரிப்பாளரும் கூட.

இவர்களுக்கு   அவந்திகா மற்றும் ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் .அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘அவ்னி சினிமாக்ஸ்’ என்ற பெயரிட்டுள்ளன.

நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள்கள்   போட்டோவை வெளியிட்டுI always wanted daughters. God gifted me with best friends” என்று டேக் செய்து தனது மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.