90ஸ் பிரபலம் அப்பாஸை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த  நடிகை குஷ்பூ … குடும்பத்துடன் டின்னர் சாப்பிட்டு மகிழ்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்… 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் அப்பாஸ். இவர் மேற்கு வங்காளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஆயிரத்து 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அதை தொடர்ந்து இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே போன்ற  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹார்பிக் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.இவர்  நடிப்பில் இறுதியாக  2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பச்சக்கல்லம்’ என்ற மலையாள படம்.நடிகர் அப்பாஸ் எரும் ஹுசைன் கானை என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.நடிப்பை விட்டு விட்டு   நியூசிலாந்தில் செட்டிலாகி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.  நியூசிலாந்தில் நடிகர் அப்பாஸை சந்தித்த  நடிகை குஸ்பு அங்கு எடுத்த  புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.