என்னது….! கே ஆர் விஜயாவின் கணவர் சொந்தமா விமானம், கப்பல் எல்லாம் வச்சிருந்தாரா?…. அப்படி என்ன தொழில் செஞ்சாரு அவரு….!!!

சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகை கே .ஆர் விஜயா இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் 1963ஆம் ஆண்டு தனது நடிப்பை தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல தலைமுறை நடிகர்களுடன் நடித்து தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

   

படங்கள் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு மலையாளம் என 20க்கும் மேற்பட்ட சீரியல்களும் நடித்துள்ளார். இவர் நடிப்புக்காக நந்தி விருது ஃபிலிம்பேர் விருது , வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் திரையில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான சுதர்சன் வேலாயுதம் நாயர் என்பவரை 1966 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஹேமலதா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் வேலாயுதம் அவர்கள் மார்ச் 26 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.  அதில் பல நட்சத்திர பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். கே ஆர் விஜயா அவர்களின் கணவர் சுதர்சன் சிட்பன்ஸ் நிதி நிறுவனம் சென்னை மற்றும் பெங்களூரில் நடத்தி வந்தார். மேலும் இவருக்கு பல நட்சத்திர ஹோட்டல்களும், சொந்தமான கப்பல் மற்றும் விமானமும் அவருக்கு இருந்தது.