தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்பொழுது அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் வெள்ளித்திரையில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கினார் நடிகை குஷ்பூ. இதை தொடர்ந்து சின்ன திரையில் கால் பதித்த இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
நடிப்பை தாண்டி அரசியலிலும் நடிகை கால் பதித்து கலக்கி வருகிறார். தற்பொழுது இவர் பாஜக கட்சியின் தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட நடிகை குஷ்பூ காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து பாஜக கட்சி சார்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் திடீரென நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகை குஷ்புவிற்கு முதுகு தண்டுவட பகுதிக்கு கீழ் மிகவும் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்பொழுது நடிகை குஷ்பூ மீண்டும் அதே coccyx bone எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் குஷ்பூ. தற்பொழுது இவர் கையில் டிப்ஸ் ஏற்றுக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை தனது instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார்.